மெட்டி ஒலி’ தொடரின் புகழ் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று ‘மெட்டி ஒலி’. திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த தொடா் 002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை ர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4-வது மகளாக நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி.
இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘உன்னை நினைத்து’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் , ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும்நடித்துள்ளார்.
இவருடைய கணவர் முருகன் கால்நடை மருத்துவராக உள்ளாா் . திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்த அவா் சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதற்குச் சிகிச்சை எடுத்துக் குணமான போதும் மீண்டும் மஞ்சள் காமாலை ஏற்பட்டு தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று (ஒக்டோபர் 17) காலை திடீரென்று மரணமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. முருகன் – உமா மகேஸ்வரி தம்பதியினருக்குக் குழந்தை கிடையாது