சினிமா பிரதான செய்திகள்

சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது . இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றிருந்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

அதேவேளை சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.