மன்னார் பேசாலை காவல்துறைப் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்கவின் பணிப்பின் போில் குறித்த பகுதிக்குச் சென்ற காவல்துறையினா் கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பேசாலை காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.