கடனை வழங்க இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமானது, எரிபொருளுக்காக இந்தியாவிலிருந்து கடனைப் பெறுவதற்கான முன் நிபந்தனை அல்ல என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப்
பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்குவதற்காக , மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு
நிபந்தனையையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19.10.21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு
நிபந்தனை விதித்தா இந்தியா, இலங்கைக்கு கடன் உதவி வழங்கியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலுக்கும் கடனுதவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக எந்தவொரு நாட்டிலிருந்தும் கடனைப் பெறும் போது, அதற்கென சில நிபந்தனைகள் இருப்பது வழமை. ஆனால் இந்தியாவிலிருந்து பெறும் கடன், நிபந்தனையின்றி வழங்கப்ப டுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.