Home இந்தியா காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

by admin

நேற்றையதினம் , கடற்படையினரின் படகு மோதி கடலில் மூழ்கி காணாமல் போன இந்திய மீனவர், சடலம் காரைநகர் – கோவளம் கடலிலிருந்து, இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராசு ரஜிகரன் எனுமட மீனவரின் சடலடீம இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மீனவரின் சடலம், தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவுளை கடற்படையின் படகுடன் மோதிய இந்திய மீனவ படகிலிருந்து கைது செய்யப்பட்ட  இரண்டு இந்திய மீனவர்களும் நேற்று மாலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More