Home உலகம் பிரிட்டனைப் பின்பற்றுமா போலந்து? “பொலெக்ஸிற்” அச்சத்தில் ஜரோப்பா!

பிரிட்டனைப் பின்பற்றுமா போலந்து? “பொலெக்ஸிற்” அச்சத்தில் ஜரோப்பா!

by admin

இறுதி மாநாட்டில் அங்கெலாவுக்கு தலைவர்கள் எழுந்து பிரியா விடை “அங்கெலா இல்லாத ஐரோப்பா வத்திக்கான் இல்லாத ரோமாபுரி ,அல்லது ஈபிள் கோபுரம் இல்லாத பாரிஸ் போன்றது” இப்படித் தெரிவித்திருக்கிறார் ஐரோப் பிய ஒன்றியக் கவுன்சிலின் தலைவர் சார்ள்ஸ் மிச்செல் (Charles Michel). தனது 16ஆண்டு கால அரசியல் பயணத்தை நிறைவு செய்கின்ற அங்கெலா மெர்கல் இன்று பிரெசெல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில் பங்குபற்றி னார். அது அவர் கலந்து கொள்கின்ற 107 ஆவது மாநாடு. அதே நேரம் கடைசி மாநாடும் கூட என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

2005 ஆம் ஆண்டு முதலாவது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களது மாநாட்டில் அவர் அப்போதைய பிரெஞ்சு அதிபர் ஜக் சிராக், பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் போன்றவர்களுடன் கலந்து கொண்டார்.

ஜேர்மனியில் நடைபெற்ற தேர்தலின் பின்னர் அங்கு புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 67 வயதான அங்கெலாதற்சமயம் இடைக்காலச் சான்சிலராகப் பதவியில் நீடிக்கிறார்.எதிர்வரும் டிசெம்பருக்கு முன்னராக அங்கு புதிய ஆட்சி அமைக்கப்படா விட்டால் ஜேர்மனியின்சான்சிலர் என்ற ரீதியில் அடுத்து இன்னொரு மாநாட்டில் கலந்து கொள்கின்ற சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கலாம்.

கடந்த 16 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பா எதிர்கொண்ட நெருக்கடிகளைத் தனது பலமாகிய இணக்க வழிமுறை ஊடாகத் தீர்த்து வைத்தவர் மெர்கல்.”ஒரு சமரச இயந்திரம்” என்றும் (‘compromise machine’) ஐரோப்பாவின் “திசை காட்டி” (‘compass’) எனவும் இன்றைய மாநாட்டில் தலைவர்கள்அவருக்குப் புகழாரம் சூட்டினர்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடுகின்ற ஐரோப்பா கட்டடத்தின்(Europa building) அடையாளமாக அமைந்த நினைவுப் பரிசு ஒன்றும் அங்கெலாவுக்கு வழங்கப்பட்டது. இன்றைய மாநாட்டில் அங்கெலாவின் அரசியல் பயணம் பற்றிய இரண்டு நிமிட வீடியோப் படக்
காட்சி ஒளிபரப்பப்பட்டது. அச்சமயத்தில் தலைவர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் போலந்துக்கும் இடையே சட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள முறுகல் நிலைக்கு மத்தியில் இன்றைய பிரெசெல்ஸ் மாநாடு நடைபெறுகிறது.

போலந்து நாட்டின் அதி உயர் அரசமைப்பு நீதிமன்றம்(constitutional court) அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு இரண்டு தரப்புகளிடையிலும் முரண் பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. போலந்தில் உள்நாட்டில் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் பிரெசெல்ஸில் வரையப்பட்ட ஐரோப்பியச் சட்டங்களை விடவும் முதன்மையானவை- மேலானவை -என்றுஅது அளித்த தீர்ப்பு 27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐரோப்பியக் கட்டமைப்புக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தை மீறித் தனி வழி செல்லப் போலந்து முயற்சிக்கிறதா என்று எழுப்பப்படும் கேள்விகள், பிரிட்டனின் “பிரெக்ஸிட்” போன்றுஅடுத்து ஒரு “பொலெக்ஸிற்” (‘Polexit’) பிரிவின் ஆரம்பமாக இந்த விவகாரம் மாறிவிடக் கூடுமோ என்ற அச்சத்தைத்
தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அங்கெலா மெர்கல் இன்றைய தனது உரையில் போலந்து அரசை வார்த்தைகளால் தாக்குவதைத் தவிர்த்து அமைதி பேணும் வழிமுறைகள் ஊடாகப் பாரியசேதம் ஒன்றைத் தவிர்க்கவேண்டிய நிதானத்தை முதன்மைப் படுத்தினார்.ஆனால்அவர் மக்ரோன் போன்ற தனது சக தலைவர்களை எச்சரிக்கை செய்தார். பிரிட்டனைப் போலன்றி போலந்து ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பின் மையத்தில் உள்ள நாடு ஆகும். அதனோடு ஏற்படக்கூடிய பிரிவினை கட்டமைப்புக்குப்பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடியது.

குமாரதாஸன். பாரிஸ்.
22-10-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More