சினிமாவில் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகானின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மன்சூர் அலிகான் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரச புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.