226
இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன. பயிற்சி நடவடிக்கைக்காக இந்த கப்பல்கள் இலங்கை சென்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்திற்கு 4 கப்பல்களும் சென்றுள்ளன.
INS Magar, INS Shardul, INS Sujata (P56), INS Tarangini, INS Sudarshini, CGS Vikram ஆகிய கப்பல்களே இலங்கை சென்றுள்ளதாகவும், இந்திய கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுடனான கெடட் படையினர் இந்த கப்பல்களில் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love