Harcèlement scolaire (school bullying) எனப் படுகின்ற பாடசாலைத் துன்புறுத்தல்கள்
அதிகரித்து வருகின்றன. பதின்ம வயது இளையோர் மத்தியில் இணைய வழிகளிலும் நேரடியாகவும் இடம்பெறுகின்ற துன்புறுத்தல்கள் தற்கொலை, மோதல்கள் என்று உயிரிழப்புகளில் முடிகின்றன.
வட்ஸ் -அப் குறூப் ஊடாகத் தொல்லைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்தவர் எனக் கூறப்படும் 14 வயதுப் பள்ளி மாணவி ஒருத்தி இம்மாத ஆரம்பத்தில் தனது அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பிரான்ஸின் கிழக்கே முலூஸ் பகுதியில்உயிரிழந்த டீனா (Dinah) என்னும் அந்தச்சிறுமிக்கு அஞ்சலி தெரிவிக்கும் பேரணிஒன்று இன்று அங்கு நடைபெற்றது.
பெற்றோர் மற்றும் உறவினர்களது தகவலின்படி அந்தச் சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிச் சூழலிலும் இணைய உரையாடல்கள் வழியிலும்தொல்லைகளுக்கு ஆளாகி வந்தார் என்பது தெரியவந்துள்ளது. கல்லூரி நண்பர்களால் தகாத முறைகளில் வசைகளையும் இம்சைகளையும் சந்தித்து வந்தஅவர் அது பற்றி வெளியே அதிகம் காட்டிக்கொள்ளாமல் மனப் பாதிப்புக்குட்பட்டிருந்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர். முன்னர் ஒரு தடவையும் அவர்தற்கொலைக்கு முயன்றார் என்ற தகவலையும் தாயார் வெளியிட்டுள்ளார்.
தாயாரது முறைப்பாட்டை அடுத்து சிறுமிதுன்புறுத்தல்களுக்கு (bullying) உள்ளாகினாரா என்பது தொடர்பில் முலூஸ் (Mulhouse) அரச சட்டவாளர் அலுவலகம்விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாணவிக்கு நேர்ந்த அவலத்துக்கு பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகம் மீது பொறுப்பைச் சுமத்துகின்றனர். ஆனால்மாணவர்களது இணைய வழித்தொடர்பாடல்களையும் அவை சம்பந்தமான வன் முறைகளையும் தாங்கள் கண்காணிக்கமுடியாது என்று பாடசாலை நிர்வாகங்கள் கைவிரிக்கின்றன.
பிரான்ஸின் பள்ளிச் சமூகத்தினரிடையேஇது போன்ற துன்புறுத்தல் சம்பவங்கள்அதிகரித்து வருகின்றன. பாடசாலைச்சூழலில் இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளனஆனால் cyberstalking என்கின்ற கட்டுப்படுத்த முடியாத இணைய வழித் துன்புறுத்தல்கள் தொடர்வது கவலையளிப்பதாகக் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவோர் அதுபற்றி முறையிடுவதற்கு 3020 என்ற தேசிய தொலை பேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் என்ற வட்டத்தினரது கண்காணிப்புக்கு அகப்படாத விதத்தில் இணையத்தின் வழியில் தொடருகின்ற துன்புறுத்தல்கள் வன்முறைகளில்இளைய தலைமுறையினர் சிக்கிச் சீரழி கின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
25-10-2021