
கைத்துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையின ரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வீடொன்றில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் கைப்ற்றப்பட்டன.
அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அங்கு வசிப்பவர் கைது செய்யப்பட்டார்” என்று காவல்துறையினர் கூறினர். பருத்தித்துறை காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
Spread the love
Add Comment