190
இலங்கையின் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பல தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை, ரயில், பஸ், துறைமுகம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும், மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகத்தின் முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும், இலங்கை மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
Spread the love