Home இலங்கை இத்தாலியில் குழந்தைகளைக் கொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்!

இத்தாலியில் குழந்தைகளைக் கொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்!

by admin


கணவன்-மனைவி இடையிலான பிணக் குகளில் குழந்தைகள் பலியிடப்படுகின்ற சம்பவங்கள் தொடர்கின்றன.


இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சபாடி(Sabadi) மற்றும் சந்தனி (Sandani) ஆகிய பெயர்கள் கொண்ட 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.


அவர்களது சடலங்கள் வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டுள்ளன. இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. குழந்தைகள்இருவரும் தலையணை மூலம் மூச்சிழக்கும் வரை அழுத்திக் கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.


பிள்ளைகளுக்கு சுகயீனம் காரணமாக மாத்திரைகள் கொடுத்து உறங்க வைத்துள்ளேன்.அதனால் அவர்கள் பாடசாலை செல்லவில்லை என கடைசியாக நேற்றுக் காலையில் தன்னைச் சந்தித்த சமூக உதவியாளர் ஒருவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். அதன் பின் அவர் தலைமறைவாகி விட்டார். அதன் பிறகே படுக்கையில் போர்வையினால் மூடப்பட்ட நிலையில் குழந்தைகளது உடல்கள்கண்டுபிடிக்கப்பட்டன.


குழந்தைகளது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் காவற்துறையினர் தாயாரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மோப்ப நாய்கள், ட்ரோன்கள் போன்றவற்றின் உதவியுடன் பல மணி நேரங்கள் நீடித்த தேடுதலுக்குப் பிறகு அவரது சில உடைமைகளைக் கண்டுபிடித்த காவற்துறையினர் பின்னர் அப்பகுதியில்உள்ள Adige என்ற ஆற்றில் இருந்து தாயாரது சடலத்தை மீட்டனர்.


இலங்கையின் சிங்கள இனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சசித்ரா நிசன்சல பெர்னான்டோ (Sachithra Nisansala Fernando Dewedra Mahawaduge) என்ற 34 வயதான பெண்ணே இவ்வாறு குழந்தைகளையும் கொன்று உயிரிழந்துள்ளார் என்ற தகவலை இத்தாலி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.


கணவருடன் ஏற்பட்ட பிணக்குகளை அடுத்து அவரும் குழந்தைகளும் அரசினால் வழங்கப்பட்ட தங்குமிடம் ஒன்றில்வசித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.


தனது கணவர் தன்னிடமிருந்து பிள்ளைகளைப் பறிக்க முயன்றால் அவர்களைக்கொன்று விடுவேன் என்று அந்தத் தாயார் அடிக்கடிக் கூறிவந்துள்ளார் என்ற தகவலை சில சாட்சிகள் வெளியிட்டுள்ளன. (படங்கள் :இத்தாலி ஊடகங்கள்)

குமாரதாஸன். பாரிஸ்.
27-10-2021

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More