இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை நடத்திய வழக்கு விசாரணைகளின் தகவல்களை கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சட்டமா அதிபரிடம் கடிதம் ஒன்றை, இன்று (02.11.21) கையளித்தனர்.
அரசாங்கத்தின் நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பிலான பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் சம்பந்தமான தகவல்களை, சட்டமா அதிபரிடம் கோரியுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சட்டமா அதிபரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, காவிந்த ஜெயவர்தன ஆகியோரோ சட்ட்மா அதிபர் திணைக்களத்துக்கு சென்றிருந்தனர்.