மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (2) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது பாடசாலை மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-இதே வேளை இராணுவ புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை மதியம் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து 1 கிலோ 665 கிராம்,கேரள கஞ்சா போதைப்பொருளை தம்வசம் , வைத்திருந்த மற்றும் கொண்டு சென்ற குற்றத்தில் புத்தளத்தில் வசிக்கும் 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.