185
தீபாவளியை முன்னிட்டு நல்லூரானை நேரில் வழிபட வந்திருந்தவர்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணியே ஆலயத்தினுள் செல்ல அனுமதித்தனர். தீபாவளியை முன்னிட்டு பெருமளவான பக்தர்கள் நல்லூரானை நேரில் வழிபடுவதற்காக சென்று இருந்தனர்.
அந்நிலையில் ஆலய வாயிலில் , பக்தர்கள் முக கவசம் உரிய முறையில் அணிய அறிவுறுத்தி , கைகளுக்கு தொற்று நீக்கி வழங்கப்பட்டு , குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்களே ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆலயத்தினுள்ளும் பக்தர்கள் குழுமி நிற்காத வாறு சமூக இடைவெளியை பேணி வழிபடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டு இருந்தன.
Spread the love