இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயது யுவதி கைது

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தகவல்கள் கிடைத்திருந்த நிலையில்காவல்துறையினர் அவரை தேடியதாகவும் பின்னர் இருவரும் மல்லாகத்திலிருந்து வெளியேறி தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகவும் இதனடிப்படையில் கடந்த பல நாட்களாக சந்தேகநபர்களை கண்காணித்துவந்த நிலையில் நேற்று மாலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.