எதிா்வரும் காலங்களில் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கொவிட்-19 தொற்று பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சிரேஸ்ட சுகாதார அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் எனவும், இதனைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது