212
வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என வடமாகாண ஆளுநரிடம் , இராணுவ தளபதி உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடிய நிலையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என இராணுவ தளபதி உறுதி வழங்கினார்.
Spread the love