203
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love