165
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 7 ஆயிரத்து 584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் 75 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை 8 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 139 குடும்பங்களை சேர்ந்த 463 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love