22-வது உலகக்கிண்ண கால்பந்து போட்டி இம்முறை ஆசிய கண்டத்தில் கட்டாாில் நவம்பர் 21-ந் திகதி முதல் டிசம்பர் 18-ந் திகதி வரை அங்குள்ள 5 நகரங்களில் நடைபெறவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக்கிண்ண கால்பந்துப் போட்டி கடைசியாக 2018-ம் ஆண்டு ரஸ்யாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி குரேஷியாவை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டாா் மட்டும் நேரடியாக விளையாடும். மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் மூலமே பங்கேற்க முடியும்.
இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜெர்மனி, டென்மார்க் அணிகள் கடந்த மாதம் நடைபெற்ற போட்டிகளில் தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து பிரேசில், தென் அமெரிக்க கண்டத்தின் முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்த நிலையில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.இரண்டு முறை உலகக் கிண்ணத்தினைக் வென்ற பிரான்ஸ், 15-வது முறையாகவும், பெல்ஜியம் 13-வது முறையாகவும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது