மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தனோரா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், மகாராஷ்டிர காவற்துறையின் சி-60 சிறப்புப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் காவற்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் காவற்துறை வெளியிட்டுள்ளது. அதில் காவற்துறையினரால் தலைக்கு 50 லட்சம் ரூபாய் என விலை அறிவிக்கப்பட்ட முக்கிய தலைவரான மிலிந்த் டெல்டும்டேயின் பெயரும், ஆறு பெண் மாவோயிஸ்ட்டுகள் பெயரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதொடர்ந்த இந்த மோதலில் இந்த மோதலில், சிறப்பு காவற்துறையை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் சிலவற்றை மற்ற மாவோயிஸ்டுகள் தூக்கிக் சென்றதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருவதாகவும் காயமடைந்த காவற்துறையினரை் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அவர்கள் நிலை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் குறிப்பிட்டுள்ளார்..
70க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் கட்சிரோலி பகுதியில் நுழைந்திருப்பதாக குறிப்பாக கோட்கல், கியாரபட்டி காடுகளில் நுழைந்ததாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிறப்பு பயிற்சி பெற்ற 60 பெர் கொண்ட காவல் படை அந்தப் பகுதியை சுற்றி வளைத்ததாகவும் அவர் கூறியு்ளார்.