161
யாழில் வாழைக்குற்றிகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருநாளான இன்றைய தினம் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுவார்கள். அதில் ஒரு அங்கமாக தங்களது வீடுகளுக்கு முன்னால் வாழைக்குற்றியை நட்டு அதன் மேல் சட்டியில் எண்னெய் ஊற்றி , திரி வைத்து தீபமேற்றுவார்கள்.
அதனால் யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வாழைக்குற்றிகளை சிலர் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு வாழைக்குற்றி 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர். அதேவேளை இம்முறை சிட்டிகளும் பல வர்ணங்கள் மற்றும் வடிவமைப்பில் விற்பனை செய்து வருகின்றனர்.
Spread the love