பிரதான செய்திகள் விளையாட்டு

பாலியல்தொல்லை முறைப்பாடு – டிம் பெயின் அணித்தலைவா் பதவியிலிருந்து விலகினாா்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவா் டிம் பெயின் பாலியல் தொல்லை முறைப்பாடு காரணமாக தனது அணித்தலைவா் பதவியிலிருந்து விலகியுள்ளாா்.

சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் முறைப்பாடு எழுந்த நிலையில் இன்று காலை அவா் தனது அணித்தலைவா் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில் டிம் பெயின் இந்த முடிவை அறிவித்துள்ளார். இது குறித்து டிம் பெயின் கூறியதாவது :


ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்போதைய பெண் சக ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். இந்த தனிப்பட்ட உரைப் பரிமாற்றம் பொது வெளியில்  வரப் போகிறது என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பதற்கான தரத்தை 2017 ஆம் ஆண்டு நான் செய்த அந்த செயல்கள் பாதிக்கின்றன.

எனது மனைவிக்கும், எனது குடும்பத்தினருக்கும், மற்ற தரப்பினருக்கும் நான் ஏற்படுத்திய காயம் மற்றும் வலிக்காக ஆழ்ந்து வருந்துகிறேன். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். இது எங்கள் விளையாட்டின் நற்பெயரைக் கெடுக்கும். இதனால் நான் அணித் தலைவா் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்.


ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு விரும்பத்தகாத இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அ அணியின் தலைவராக எனது பங்கை நான் விரும்பி செய்துள்ளேன். அவுஸ்திரேலிய  டெஸ்ட் அணியை வழிநடத்தியது எனது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.


எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நாங்கள் ஒன்றாகச் சாதித்ததில் பெருமைப்படுகிறேன். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உறுதியான உறுப்பினராக எப்போதும்  நான் இருப்பேன். அடுத்து வரும் ஆஷஸ் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என அவா் தொிவித்துள்ளாா்

2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய அவுஸ்திரேலிய அணியின் தலைவா் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.