இராணுவத்தன் எடுபிடி என்று அழைக்கப்படுபவரும், சர்ச்சைகளின் சொந்தக்காரருமான அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் காவற்துறையினர் இன்று இவரை கைது செய்துள்ளனர்.
பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்..
அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் காவற்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவற்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சலகூடம் அமைப்பேன் என்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது