182
காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தை புத்தங்கல காட்டுப்பகுதியில் காட்டு யானையொன்று கடந்த வெள்ளிக்கிழமை(19) உயிரிழந்திருந்தது.
குறித்த காட்டு யானை மின் கம்பி வேலியில் அகப்பட்டே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், சம்மாந்துறை பொலிஸார் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love