Home உலகம் கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச்சுக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்

கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச்சுக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்

by admin

கொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் பிபிசிக்கு வழங்கிய நோ்காணலில் தொிவித்துள்ளாா்.

முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் பல நாடுகளிலும் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது.

குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் இருப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயல்படுத்துவது போன்றவை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது எனத் தொிவித்துள்ள அவா் வைரஸ் பரவலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என நமக்குத் தெரியும் எனவும் கூறினார்.

கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சொல்வதை கடைசி வாய்ப்பாகக் கருத வேண்டும் எனத் தொிவித்த அவா் எனினும் இப்போது அது தொடர்பாக சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்படுவது சரியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன் கொரோனா பாஸ் போன்ற வழிகளும் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவா் இது சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு அல்ல, மாறாக தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ஒரு சாதனம் எனவும் தொிவித்துள்ளாா்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு சட்ட ரீதியிலான தேவை என ஐரோப்பிய பிராந்தியத்தில் முதல் நாடாக கடந்த வெள்ளிக்கிழமை ஒஸ்ரியா.அறிவித்தது இந்த புதிய அறிவிப்பு வரும் 2022 பிப்ரவரி முதல் அமுலுக்கு வரும், ஆனால் இதை எப்படி செயல்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரச்சனை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இடம் கிடைக்காது. எனவே அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் தொிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பை எதிர்த்து, தலைநகர் வியன்னாவில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் போராட்டக்காரர்கள் ‘தடுப்பூசி வேண்டாம் இதுவரை நடந்தது எல்லாம் போதும் போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நெதர்லாந்தில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து, ரோட்டர்டாமில் கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அரசின் கட்டுப்பாடுகள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஜெர்மனியில் மீண்டும் தேசிய அளவில் ஓர் ஊரடங்கு அறிவிக்கும் வாய்ப்பு இல்லை என கூறமுடியாது என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளாா்.

பிாித்தானியாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 44,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மீண்டும் ஒரு புதிய ஊரடங்கை கொண்டு வரும் திட்டம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்தது . எனினும் தேசிய பொது சுகாதார சேவையைப் பாதுகாக்க, பிளான் பி என்கிற பெயரில் கூடுதலாக சில கொரோனா விதிமுறைகளைக் கொண்டு வரலாம் எனவும் அரசாங்கம் தொிவித்துள்ளது.

சில உள்ளரங்கு இடங்களுக்கு கொரோனா கடவுச்சீட்டை கட்டாயமாக்குவது, உள்ளரங்குகளில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்த படியே வேலை செய்ய ஊக்குவிப்பது போன்றவை இந்த பிளான் பி திட்டத்தில் அடங்கும்.

பிபிசி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More