இலங்கை பிரதான செய்திகள்

படகுப் பாதை கவிழ்ந்ததில் கிண்ணியாவில் அறுவர் பலி!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.

இன்றுக்காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என காவற்துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருக்கும் காவற்துறையினர், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம்  அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த  ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக   நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


இருந்த போதிலும் கிண்ணியா மக்களின் நீண்டநாள் கனவாக காணப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.