திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது. இந்தப் பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் அறுவர் மரணமடைந்தனர்.
இதனையடுத்து கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறார்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்து – 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.
காணாமற்போன ஏனையோரை மீட்டெடுக்கும் பணிகளில், கடற்படையின் சிறப்புப் படயணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி உள்ளிட்ட சில சிறப்பு அணிகளும், சுழியோடிகளைச் சேர்ந்த எட்டு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.