173
கிண்ணியா படகு விபத்து உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் நேற்றைய தினம் நான்கு மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்திருந்தனர்.
படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க. பாடசாலை மாணவர்கள் , சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் ஆசியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
Spread the love