217
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்து தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளரும் அதனை இயக்கிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணியில் நேற்றையதினம் இழுமைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love