காவல்துறை உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் ராஜகிரிய பகுதியில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல்துறை உத்தியோகத்தர்களை சந்தேகநபர்கள் தாக்கியிருந்தனா் .
இதில் காவல்துறைஅதிகாரி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.