189
கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடை ஒன்று இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு இடமான மூடை ஒன்று இன்று (26) காலை மிதந்து வந்துள்ளது. அதனை கடற்படையினர் எடுத்து பிரித்துப் பார்த்தவேளை அதில் மஞ்சள் இருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த மஞ்சள் மூடை எவ்வாறு வந்தது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love