உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல்வேறு டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் உருமாற்றங்களை அடைந்துள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த உருமாற்றமடைந்த ஒமிக்ரான் கொரோனா வைரசானது பிாித்தானியாவில் இருவருக்கு கண்டறியப்பட்டள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
.
இதேபோல், ஜெர்மனியிலும் இருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.