யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்