221
யாழ்ப்பாணம் மண்டைதீவு முனைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளன எனவும் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
குருநகர் மீனவர்கள் படகுகளில் தொழிலுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் திடீரென எழுந்து சுழியில் சிக்கி இரண்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற ஏனைய மீன்பிடிப் படகுகள் திரும்பியுள்ளன
Spread the love