உலகம் பிரதான செய்திகள்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. சுகாதார நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்”எனப் பெயரிட்டது?

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும்(12th letter of the alphabet) “மு”(mu) என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அதன் பிறகு தோன்றிய ஆபிரிக்கத் திரிபுக்கு வரிசைப்படி 13 ஆவதுஎழுத்தைக் குறிக்கின்ற “நு” (“Nu”) என்றபெயரோ அல்லது 14 ஆவது கிரேக்கஇலக்கத்தைக் குறிக்கின்ற ஜி(“Xi”)என்ற பெயரோதான் சூட்டப்பட்டிருக்கவேண்டும்.

சில குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து விட்டுப் 15 ஆவது இலக்கத்தைக் குறிக்கின்ற “ஒமெக்ரோன்” என்ற பெயரைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டதாக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நு” (Nu) என்ற பெயர் ஆங்கில வார்த்தையான “நியூ” (New ) என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு ஒலியைக்கொண்டிருப்பதால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கருதி அது தவிர்க்கப்பட்டது. “ஜி” (Xi) என்பது உலக அளவில்பரவலாகப்-பிரபலமாகப் பயன்பாட்டில்உள்ள குடும்பப் பெயர் (family name).அத்துடன் சீன அதிபரது பெயரையும்(Xi Jinping) அது குறிக்கிறது. எனவே தொற்று நோய்க்குப் பெயரிடுவதில்இனம், மொழி, சமூகம், நாடுகள் சார்ந்தகுழப்பங்களைத் தவிர்க்கவேண்டும்என்ற நோக்குடன் பெயர் தெரிவுகள்செய்யப்படுகின்றன என்று ஐ. நா.அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய திரிபுகள் முதலில் கண்டறியப்படுகின்ற நாடுகளின் பெயர்களில்அழைக்கப்படுவதால் ஏற்படுகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே அவற்றுக்குத் தனித் தனியே பெயர்களைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டது.

இங்கிலாந்து வைரஸ் அல்லது ஆங்கில வைரஸ் என அழைக்கப்பட்ட திரிபுக்கு”அல்பா திரிபு” (Alpha variant) என்று முதலில் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கோவிட் வைரஸின் பல திரிபுகளுக்கு அவ்வாறு கிரேக்க இலக்கப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் “கவலைக்குரியது” என்று சுகாதார நிறுவனத்தால் தர நிலைப்படுத்தப்பட்டவற்றில் ஒமெக்ரோன் ஐந்தாவது திரிபு ஆகும்

.——————————————————————-

குமாரதாஸன். 29-11-2021பாரிஸ்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.