உலகின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதை ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஏழாவது தடவையாக கைப்பற்றியுள்ளார். போலந்தின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இத்தாலியின் ஜோர்ஜினியோ ஆகியோரை தாண்டி இவ்விருதை மெஸ்ஸி இம்முறை வென்றுள்ளாா்.
மெஸ்ஸி 613 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், லெவன்டோஸ்கி 580 புள்ளிகளையும், ஜோர்ஜினியோ 460 புள்ளிகளையும் பெற்றுள்ளனா்.
அதேவேளை , சிறந்த முன்களவீரராக லெவன்டோஸ்கியும், சிறந்த கோல் காப்பாளராக இத்தாலியின் ஜல்லூயிஜி டொன்னருமாவும் தெரிவாகியுள்ளனர். சிறந்த கழகமாக இங்கிலாந்தின் பிறீமியர் லீக்கின் செல்சி கழகம் தெரிவாகியுள்ளது. சிறந்த வீராங்கனையாக ஸ்பெய்னின் அலெக்ஸியா புடெல்லஸ் தெரிவாகியுள்ளாா்.