தல என்று தன்னை யாரும் அழைக்க வேண்டாம் எனவும் பெயர் சொல்லி அழைத்தாலே போதும் எனவும் நடிகர் அஜித்குமாா் அறிக்கை ஒன்றின் மூலம் கோாிக்கை விடுத்துள்ளாா்.
குறித்த அறிக்கையை அவரது மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்திரா தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில் , பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என் பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் , அன்புடன் அஜித்குமார். என தொிவிக்கப்பட்டுள்ளது