நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 13 தொழிலாளிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டடுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து கடும் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டதில் பொதுமக்கள் 13 பலியாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் எனவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவா்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டள்ளது.
.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.இதனையடுத்து , சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் இது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் , மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர் நெப்பியூ ரியோ கூறியுள்ளார்.