மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூச்சிக்கு மியன்மார் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயக தலைவர் ஆஆங் சான் சூச்சிக்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இந்த வழக்குகள் ஆதாரமற்றவை எனவும், இராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தொிவித்துள்ளனா்.
கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் அவரது ஆட்சியைக் கைப்பற்றியதனைத் தொடா்ந்து இருந்து நோபல் பரிசு பெற்றவரான . 76 வயதாd ஆங் சான் சூச்சி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.