முல்லைத்தீவுக் கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரது சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஏனைய இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக் கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று (5) மாலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.