பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பில்லி என்றழைக்கப்படும் இம்தியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராவல்பின்டியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 பேரை டிசம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.