Home இலங்கை வடக்கு – கிழக்கு கடல் கரை ஓரங்கள், சடலங்களின் ஒதுக்கங்களா? தொடரும் மர்மங்கள்!

வடக்கு – கிழக்கு கடல் கரை ஓரங்கள், சடலங்களின் ஒதுக்கங்களா? தொடரும் மர்மங்கள்!

by admin
கோப்பு படம்

மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் , உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று (8.12.21) காலை குறித்த சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு சென்ற காவற்துறையினர் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிக்கு காவற்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாடு பூராகவும் உள்ள கடற்கரைப்பகுதிகளில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதிங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More