சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் யாழ்ப்பாணம் அம்பாறை, குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதில் Search for Common ground(SFCG) உடன் AWF,WRC,JSAC, Grameen போன்ற நிறுவனங்கள் கூட்டாக செயற்படுகின்றன.
குறிப்பாக பொருளாதார முன்னெடுப்பில் பெண்களினை வலுப்படுத்துவது தொடர்பான பயிற்சிகளினை க்ராமீன் நிறுவனம் முன்னின்று செயற்படுகின்றது. அந்தவகையில் இதன் செயற்படாக நேற்றைய தினம் ஆரம்பமான பெண் சுயதொழில் முனைவருக்கான பயிற்சி செயலமர்வானது எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சி செயலமர்வானது கீறீன்கிறாஸ் விடுதியில் இடம்பெற்றுவருகின்றது. மாவட்ட பங்காளரான JSAC நிறுவனம் இதனை ஒழுங்கமைத்துள்ளது.