ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உட்பட்ட குளங்களை தூர்வாரி , அழகு படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில் , அதன் ஒரு அங்கமாக ஈச்சமோட்டை மறவர் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு அழகு படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்நிலையில் குளத்தின் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை முதல்வர் மக்கள் பார்வைக்கு வெளியிட்டு வைத்துள்ளார்.
இதேவேளை , முன்னதாக யாழ் நகர் மத்தி பகுதியில் அமைந்துள்ள ஆரிய குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தது கடந்த 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த குளங்கள் புனரமைப்பு பணிகளுக்கு தியாகி அறக்கொடை நிறுவனர் நிதி பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.