பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கிபடுகொலையில் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தில் பாரிஸ் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சவுதிப் பிரஜை விடுவிக்கப்பட்டிருக்கிறார். கஷோக்கியைப் படுகொலை செய்தமரணப் படைப்பிரிவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் Khaled al-Otaibi என்பவர் பாரிஸ் விமான நிலையத்தில்இரண்டொரு தினங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
துருக்கி அரசு விடுத்திருக்கும் சர்வதேசக் கைது உத்தரவின் கீழேயே அவரைப் பாரிஸ் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் கைதான நபர் தேடப்படுகின்ற Khaled al-Otaibi அல்லர் என்றும் அதே பெயரைக் கொண்ட மற்றொரு சவுதிப்பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பாரிஸ் சட்டமா அதிபர்அலுவலகம் தெரிவித்துள்ளது
.Khaled al-Otaibi என்ற பெயருடைய கடவுச்சீட்டை வைத்திருந்ததன் காரணமாகவேஅவர் காவல்துறையினரிடம் சிக்க நேர்ந்துள்ளது.தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதேவேளை, கைதானவர் கொலையில்தொடர்புடைய நபர் அல்லர் என்பதைபாரிஸில் உள்ள சவுதி அரேபியத் தூதரகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
உண்மையான Khaled al-Otaibi சவுதி அரேபியாவின் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கிறார்.Khaled al-Otaibi என்னும் பெயரில் நூற்றுக் கணக்கான சவுதி பிரஜைகள் உள்ளனர்என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.-
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.08-12-2021