இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்பை மேம்படுத்தவும் அதிகாரங்களை பயன்படுத்துவது மூலம் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக இது தொடா்பில் அமெரிக்கா தொிவித்துள்ளது