இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர்.
அதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை குக் வீதி முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய நட்புறவுப் பேரவையின் தலைவர் சிதம்பரம் மோகனினால் நிர்மாணிக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையை மறவன்புலவு சச்சிதானந்தன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இந்து சமய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.