200
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உப காவல்துறைப் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
Spread the love